நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து லட்ச்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்கு இது வரை 100- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பிஹார், குஜராத், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால், கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான அணைகளும் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தானின் துங்கர்பூர் பகுதியில் கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இந்த சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அந்த சாலை வழியாக வந்த லாரி வெள்ளத்தில் சிக்கியது. மேலும் லாரியில் பயணித்த 12 பள்ளி மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH:pic.twitter.com/OtelfUn3Z6
— ANI (@ANI) September 29, 2019