நாகப்பட்டணம் அருகில் உள்ள பொரவச்சேரியைச் சேர்ந்த இளைஞர் முஹம்மது பைசான் நேற்று இரவு மாட்டுக்கறி சூப்பைச் சாப்பிட்டு அதனைப் புகைப்படமாக எடுத்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு பிறகு, அவர் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக, அப்பகுதி சேர்ந்த கும்பல் ஒன்று முஹம்மது பைசான் வீட்டிற்குச் சென்று, அவரை கடுமையாகத் தாக்கியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் நாகையில் நடந்த இந்த நிகழ்விற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதன் வெளிப்பாடாக ட்விட்டரில் மாட்டிறைச்சி சம்பந்தமாக 3 ஹாஷ்டேக்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. #BeefForLife, #Beef4life, #WeLoveBeef போன்ற இந்த டேக்களில், ஒருவரது உணவு பழக்கம், அவரது தனிப்பட்ட சுதந்திரம். அதில் தலையிடுவது தவறு என்பது போன்ற கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.