Skip to main content

ராம்விலாஸ் பஸ்வான் இறப்பில் அவரது மகன் மீது சந்தேகம்... பிரதமருக்கு கடிதம் எழுதிய கட்சி...

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

HAM writes to PM demanding investigation in Ram Vilas Paswan demise

 

 

ராம்விலாஸ் பஸ்வான் இறப்பில் அவரது மகன் சிராக் பஸ்வான் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது.

 

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த மாதம் காலமானார். டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் ராம்விலாஸ் பஸ்வான் சிகிச்சை பலனின்றி காலமானார். பீகார் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இவரின் இறப்பு அங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் இறப்பில் அவரது மகன் சிராக் பஸ்வான் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி பிரதமருக்குக் கடிதம் ஒன்று எழுதியுள்ளது. "ராம்விலாஸ் பஸ்வான் மரணத்தில் அவரது மகன் சிராக் பாஸ்வானை கேள்விக்குள்ளாக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. எனவே இதுகுறித்து தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்