குர்மீத் சிங்கை தப்பிக்க வைக்க முயற்சி? - மூன்று காவல்துறையினர் கைது!
சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை தப்பிக்க வைக்க உதவிய ஹரியானாவைச் சேர்ந்த மூன்று காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது பக்தைகள் இருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக, சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆகஸ்ட் 25ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஹரியானா உள்ளிட்ட மூன்று பகுதிகளில் நிகழ்ந்த கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
அதேநாளில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை தப்பிக்க வைக்க சதித்திட்டம் தீட்டிய, ஹரியானாவைச் சேர்ந்த மூன்று காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அமித், ராஜேஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய மூன்று காவலர்களும், குர்மீத் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்படும்போது பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டவர்கள். இவர்கள் குர்மீத்தை தப்பிக்க வைக்க முயற்சி செய்ததாக விசாரணையில் தெரியவந்தபின் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
- ச.ப.மதிவாணன்