குஜராத் சட்டப்பேரவையில் மொத்தம் 182 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளன. அந்த உறுப்பினர்களில் 175 பேர் மட்டுமே ராஜ்ய சபா தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர். இதில் பாஜக கட்சிக்கு 100 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 71 உறுப்பினர்களும் உள்ளன. அம்மாநிலத்தில் ராஜ்ய சபா எம்.பியாக தேர்வான பாஜக கட்சி தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றன. இந்நிலையில் இருவரும் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் குஜராத் மாநிலத்தில் இரு ராஜ்ய சபா இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்து, அதற்கான தேர்தல் தேதியை அறிவித்தது.
ராஜ்ய சபா தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பதை தடுக்க குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 88 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரு மாநிலங்களவை இடத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இரு வேட்பாளர்களும், பாஜக சார்பில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட இருவர் போட்டியிட்டனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று (ஜூலை 5) நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தது தெரிய வந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி கடும் அதிர்ச்சி அடைந்தது. எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பதை தடுக்க காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.