குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநிலத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினர் பல்வேறு வாக்குறுதிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். குஜராத் வரலாற்றில் காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே இருந்து வந்தது. இம்முறை ஆம் ஆத்மி களத்திற்கு வரவும் மும்முனைப் போட்டியாகத் தேர்தல் களம் சூடு பிடித்தது.
இதற்கிடையே இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே அமைதியாக நடைபெற்று வரும் தேர்தலில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். இதில் சுவாரசிய சம்பவங்கள் காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இன்று காலை இளைஞர் ஒருவருக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், வாக்குப்பதிவுக்குத் திருமணம் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்ற காரணத்திற்காகத் திருமணத்தை மாலை நேரத்திற்கு ஒத்திவைத்துவிட்டு காலையில் மாப்பிள்ளை கோலத்தோடு வந்து வாக்கு செலுத்தியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.