
குஜராத் முதல்வர் விஜய் ரூபனி. பாஜகவைச் சேர்ந்த இவர், நேற்று (14.02.2021) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவருக்கு மேடையிலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வர் விஜய் ரூபனிக்கு கடந்த இரண்டு நாட்களாகவே உடல்நிலை சரியில்லை என்றும், இருப்பினும் அவர் அதனைப் பொருட்படுத்தாமல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், தற்போது அவரின் உடல்நிலை நலமாக இருப்பதாகவும் அம்மாநில பாஜக தெரிவித்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்குக் கரோனா இருப்பது உறுதியாகிவுள்ளது. முதல்வர் விஜய் ரூபனியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் 24 மணிநேரத்திற்கு மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பாரென்றும் அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.