Skip to main content

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு..?

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

ஜிஎஸ்டி அடிப்படை வரி விகிதத்தை உயர்த்தும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 2 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கடந்த பல மாதங்களாக வரும் வரி வசூல் எதிர்ப்பார்த்ததைவிட குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் வரி வசூலை அதிகரிக்க ஜிஎஸ்டி அடிப்படை வரி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதக தகவல் வெளியாகியுள்ளது. 



அதாவது, 5% உள்ள ஜிஎஸ்டி குறைந்தபட்ச வரி 9 - 10% அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதை தவிர்த்து 12% வரி வரம்பில் உள்ள சுமார் 243 பொருட்களை 18% வரம்பிற்கு மாற்ற உள்ளதகாவும் கூறப்படுகிறது.  இப்படி விலை உயர்த்தப்பட்டால் அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்