ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு இலட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
2019-ம் ஆண்டிற்கான ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ. 1,02,503 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 14% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் ஜனவரி மாதத்திற்கான மொத்த ஜி.எஸ்.டி வரி ரூ. 89,825 கோடி என பதிவு செய்யப்பட்டிருந்தது.
2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் மொத்த ஜி.எஸ்.டி வரியில் மத்திய அரசுக்கான சி.ஜி.எஸ்.டி ரூ. 17,763 கோடி எனவும். மாநில அரசுக்கான எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 24,826 கோடி எனவும் பதிவாகியுள்ளது.
இதைத்தவிர்த்து இறக்குமதி வரி ரூ. 24,065 கோடியுடன் சேர்ந்து ஐ.ஜி.எஸ்.டி 51,225 கோடி எனவும், செஸ் வரி ரூ. 8,690 எனவும் பதிவாகியுள்ளது. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்குவந்த ஜி.எஸ்.டி வரி வசூல் முறையில், ஒரு இலட்சம் கோடி ரூபாய் தாண்டி வசூலாவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.