![draupadi murmu](http://image.nakkheeran.in/cdn/farfuture/MwknmKMnayDnMeXacSl-CgRiPaUZKG8P3iZ_Fhw7m8w/1658730408/sites/default/files/inline-images/77_49.jpg)
குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து, குதிரைப்படை அணிவகுப்புடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற திரௌபதி முர்மு இன்று முதல் தன்னுடைய அலுவல் பணியைத் தொடங்குகிறார்.
இந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயகக் கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையும் பலத்தையும் வெளிப்படுத்துவதாகவும், குடியரசுத் தலைவராக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என தான் உறுதியாக நம்புவதாகவும் தெருவித்துள்ளார்.