கரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களை பூஞ்சை நோய்கள் பாதித்து வருகிறது. கருப்பு பூஞ்சை மட்டுமின்றி வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை உள்ளிட்ட பாதிப்புகளும் இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் கரோனாவிற்காக 2 மாதமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து நடந்த பரிசோதனையில் அவருக்கு பச்சை பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட அந்த நபர், சிகிச்சைக்காக ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் மும்பை கொண்டுசெல்லப்பட்டார்.
பச்சை பூஞ்சைக்கான சிகிச்சை, கருப்பு பூஞ்சைக்கான சிகிச்சையை விட மாறுபட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எடை குறைவு, உடல் சோர்வு, அதிகப்படியான காய்ச்சல் ஆகியவை பச்சை பூஞ்சையின் அறிகுறிகள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.