Published on 08/10/2018 | Edited on 08/10/2018
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இது சம்மந்தமாக பந்தளம் அரச குடும்பத்தினர்களுடன் கலந்துரையாட முன் வருவதாக பினராயி தெரிவித்தார். ஆனால், அவர்களோ முன் வரவில்லை.
இந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்துள்ள பினராயி விஜயன்,” உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதுதான் எங்களின் கடமை. அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்களிடம் சண்டையிடுவது எங்களின் நோக்கம் அல்ல. கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் பாதுகாக்கப்படுவார்கள். அரசு இதுபற்றி கலந்துரையாட தயாராக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.