Skip to main content

இனி அது டெஸ் (TEZ) ஆப் (APP) கிடையாது!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
TEZ

 

'டெஸ்' (TEZ) செயலி, பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்டிருக்கும் பணப்பரிவர்த்தனை செயலி, கடந்த வருடம் கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. இது தற்போது பல புதிய அம்சங்களுடனும் பெயர் மாற்றத்துடனும் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரை டெஸ் என்னும் பெயரில் இயங்கி வந்த இந்தச் செயலி இனி 'கூகுள் பே' என்ற பெயரில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சில முன்னனணி வங்கிகளுடன் உடன்பாடு ஏற்படுத்தி கூகுள் பே தன் வாடிக்கையாளர்களுக்கு அதன் செயலியின் மூலமாகவே கடன் பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தி தரப்போவதாகவும் அதற்காக  எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, பெடரல் வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி  போன்ற சில வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் முதலில் வாடிக்கையாளர்களுக்கு கடன் அறிவிப்புகள் வரும். பிறகு வாடிக்கையாளர்கள் அவர்களுக்கான தொகையும் அதை திருப்பி செலுத்துக்குடிய காலத்தையும் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு கடன் விதிமுறைகளை பரிசீலனை செய்துவிட்டு வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்யப்படும். இதுவரை இந்த செயலியை 55 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மாதத்திற்கு 22 மில்லியன் மக்கள் இதைக் கொண்டு அவர்களின் தொழிற் பரிவர்தனைகளை செயகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்