Skip to main content

இமாலய உச்சத்தில் தங்கத்தின் விலை...!

தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை ரூ.48 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.25,568 என விற்பனையாகிவருகிறது.

 

gold

 

சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 9-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.25,384 என இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து 14-ம் தேதி சவரன் ரூ.25,160 என இருந்தது. அதன் பிறகு விலை மீண்டும் அதிகரித்து, நேற்று முன்தினம் அதிரிடியாக சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.25,520 என இருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ரூ.3,196 எனவும், சவரனுக்கு ரூ.48 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.25,568 எனவும் விற்பனையாகிவருகிறது. 

 

வெள்ளி ஒரு கிராம் ரூ.43.60 எனவும், ஒரு கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600 எனவும் விற்பனையாகிவருகிறது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்