Skip to main content

கௌரி லங்கேஷ் கொலைவழக்கில் ஆதாரங்கள் சிக்கின! - கர்நாடக அமைச்சர் தகவல்

Published on 02/10/2017 | Edited on 02/10/2017
கௌரி லங்கேஷ் கொலைவழக்கில் ஆதாரங்கள் சிக்கின! - கர்நாடக அமைச்சர் தகவல்

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.



செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், பெங்களூருவில் உள்ள அவரது வீட்டின் முன்பாக மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது அரசியல் சூழலில் மிகப்பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது. கௌரி லங்கேஷ் அடிப்படையில் இந்துத்துவ, வலதுசாரி எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டார். பல சமூக போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டவர் இவர்.

மிகப்பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய இவரது மரணத்தின் பின்னணியைக் கண்டறிய, அம்மாநில அரசின் சார்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு இந்த வழக்கு தொடர்பான சில ஆதாரங்களைத் திரட்டியுள்ளது. இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, ‘எங்களுக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால், தற்போது அவை என்னவென்று வெளியில் சொல்ல முடியாது. கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும்வரை எந்தத் தகவலும் வெளியில் சொல்லப்பட மாட்டாது. எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் சரியானவையாக இல்லையென்றால், அவை நீதிமன்ற வாதங்களில் தாக்குப்பிடிக்காது. சிறப்புப் புலனாய்வுக் குழு மேலும் கூடுதல் ஆதாரங்களைத் திரட்ட முயற்சித்து வருகிறது’ என தெரிவித்தார்.

கௌரி லங்கேஷின் மரணம் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கப்படும் என காவல்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்