உத்திரபிரதேசத்தில் கஞ்சா குறித்து சமாஜ்வாதி எம்.பி பேசிய கருத்து சர்ச்சை ஏற்படுத்த, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் காசிபூர் தொகுதியின் சமாஜ்வாதி எம்.பியான அப்துல் அன்சாரி அண்மையில் பேசி இருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
அவர் பேச்சில், 'மதம் சார்ந்த பண்டிகைகளில் சில கோவில்களில் கஞ்சாவை பிரசாதமாக வழங்குகின்றனர். அப்படி பிரசாதமாக வழங்கும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக வேண்டும் என்றதோடு, கோவில்களில் கஞ்சா பிரசாதமாக வழங்கப்படுகிறது என பேசியதற்கு பல எதிர்ப்புகள் வலுத்தது. இந்நிலையில் எம்.பி அப்துல் அன்சாரிக்கு எதிராக கோரா பஜார் புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.