
கடந்த ஒருவாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஆறாவது முறையாக இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 12 வாரங்களாக கரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, எரிபொருட்களுக்கான தினப்படி விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படாமல் இருந்த சூழலில், கடத்த ஒரு வாரமாக மீண்டும் தினசரி விலை நிர்ணய முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஆறுமுறை உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.47 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 71.14 க்கும் விற்பனையாகிறது. இது கடந்த வாரம் விற்பனையான விலையை விட லிட்டருக்கு சுமார் மூன்று ரூபாய் அதிகமாகும்.
சர்வதேச சதையில் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத அளவு சரிந்துள்ள நிலையில், இந்தியாவில் தொடர்ந்து எரிபொருளின் விலை உயர்த்தப்படுவது வாகனஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை எற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உற்பத்தி மற்றும் போக்குவரத்துப் பாதிப்புகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவரும் சூழலில், எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.