பிரெஞ்சு பொருளாதார நிபுணர் கை சோர்மன் இந்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் மற்றும் திட்டங்கள் குறித்து பேசிய சோர்மன், "இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய தொழில்முனைவோரின் வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் பின்னர் பொருளாதார திட்டங்களை விடுத்து அரசியல் விஷயங்களில் அவர் அதிக கவனம் செலுத்தியதால் அவரது திட்டங்கள் பாதிவழியிலேயே நின்றது. இது இந்திய பொருளாதாரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. தற்போது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அச்சமடைந்துள்ளனர். சொல்லப்போனால், இந்தியாவில் முதலீடு செய்ய அவர்கள் விரும்பவில்லை.
தொடக்கத்தில் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்திய தொழில்துறையினருக்கும் மிகுந்த ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தினார். ஆனால் அவரின் அரசியல் சார்ந்த விஷயங்களில் இது பாதியில் நிறுத்தப்பட்டது. இதுவே இந்தியாவுக்கும் இந்திய அரசுக்கும் கெட்டப் பெயரை வாங்கித் தந்துவிட்டது" என்றார். மேலும் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் பற்றி செய்தியாளர் கேள்விகேட்டு போது, "ஹிந்துத்வா, குடியுரிமைச் சட்டம் என எது குறித்தும் பேசவது என் வேலை இல்லை. நான் இந்தியப் பொருளாதார நிலை குறித்து மட்டுமே பேசுகிறேன்" என தெரிவித்தார்.