
கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்தைத் தயாரிக்க சிப்லா உள்ளிட்ட நான்கு இந்திய நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன.
கரோனாவால் அதிகம் பகுக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தைக் கொண்டு சிகிச்சையளிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இந்த மருந்து தயாரிப்பிற்கான உரிமத்தை வைத்திருந்த கிலியட் சயின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம், நான்கு இந்திய நிறுவனங்களுக்கு இந்த மருந்தினை தயாரிக்கும் உரிமத்தை வழங்கியுள்ளது. சிப்லா லிமிடெட், ஹெட்டெரோ லேப்ஸ் லிமிடெட், ஜூபிலண்ட் லைஃப் சயின்சஸ் மற்றும் மைலன் ஆகிய இந்திய நிறுவனங்கள் இந்த மருந்து தயாரிப்பில் இனி ஈடுபட உள்ளன. இதன்மூலம் இந்தியாவிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்யும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அதேபோல பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபெரோசன்ஸ் ஆய்வக நிறுவனத்திற்கும் இந்த மருந்து தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.