Published on 12/11/2020 | Edited on 12/11/2020
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது மத்திய அரசு.
அதன்படி, 'வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகள் மாணவ சங்கங்கள் நிதியை பெற முடியாது. வெளிநாட்டு நிதி பெற விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும். நிதி பெற விரும்பும் அமைப்பு குறைந்தது ரூபாய் 15 லட்சத்தை மூன்று ஆண்டில் நலத்திட்டத்திற்காக செலவிட்டிருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளது.