Published on 27/03/2022 | Edited on 27/03/2022
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் கடற்கரைக்கு செல்வோருக்கு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பேபூர் கடற்கரைக்கு செல்வோர், இனி கரையைக் கடந்து சில மீட்டர்கள் கடலுக்கு உள்ளேயும் செல்ல முடியும்.
கேரள அரசின் சுற்றுலாத்துறை, கரையில் இருந்து கடலுக்குள்ளே 100 மீட்டர் தொலைவுக்கு மிதக்கும் பாலத்தை அமைத்துள்ளது. அலைகளில் மிதக்கும் இந்த பாலத்தின் மீது மக்கள் அச்சமின்றி நடந்துச் சென்று புதிய அனுபவத்தைப் பெறுகின்றனர். பாதுகாப்பு உடை அணிந்து பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றன.
இந்த மிதக்கும் பாலம், அலைகள் எழும் போது, மேலும், கீழுமாக பாலம் அசைவதால், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் இங்கு வந்து நேரத்தைச் செலவிடுகின்றனர். மேலும், சுற்றுலாத்துறையின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Kerala | A floating bridge has been set up by the state tourism department at Beypore beach in Kozhikode to walk along with waves pic.twitter.com/6SGRyUEn2J— ANI (@ANI) March 27, 2022