Skip to main content

வாக்கு எண்ணிக்கையையொட்டி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

five state assembly election vote counting election commission

 

தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. ஆனால், எட்டு கட்டங்களாக நடைபெற்று வரும் மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில், ஏழு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், எட்டாம் மற்றும் இறுதிக் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (29/04/2021) நடைபெறுகிறது.

 

அதைத் தொடர்ந்து, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. 

 

அந்த வகையில், ஐந்து மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளையும், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, "வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக் கூடாது. வேட்பாளர்கள், முகவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பான தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தைக் கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். முகக்கவசம், கிருமிநாசினி, ஃபேஸ் ஷீல்டு, கையுறை ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்." இவ்வாறு தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்