Published on 02/05/2021 | Edited on 02/05/2021
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் தற்போதைய நிலவரப்படி என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அசாமில் பாஜக கூட்டணி 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. கேரளாவில் 23 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 23 இடங்களிலும், பாஜக மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 29 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.