ஒரு மகன் பிறக்கவில்லை என்பதற்காக 5 மகள்களையும் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாவாடி காலா கிராமத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ராணாராம் என்பவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேணு தேவி (38). இந்த தம்பதியருக்கு 5 குழைந்தைகளை பெற்றுள்ளனர். தனக்கு பிறந்த 5 பிள்ளைகளும் பெண்பிள்ளைகளே உள்ளனர்.

ஆனால் ஒரு ஆண் மகன் கூட இல்லையே என்ற விரக்தியில் தன் கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில், கொஞ்சம் கூட ஈவு, இரக்கமே இல்லாமல் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பின்னர் தானும் அந்த கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி அறிந்த அந்த ஊர் மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் 6 பெண்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாவாடி என்ற கிராமத்தில் ஆறு பெண்கள் ஒரே கிணற்றில் பிணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.