2019-ம் ஆண்டு, பிப்ரவரி 21-ம் தேதி 12 பொதுத்துறை வங்கிகளுக்கான மூலதனமாக ரூ. 48 ஆயிரம் கோடியை ஒதுக்குவதாக அரசு முடிவு செய்துள்ளது. இதில் அதிக முதலீடுகளை பெறப்போகும் வங்கிகள், கார்ப்ரேஷன் வங்கி ரூ. 9,086 கோடி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி ரூ. 5,908 மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ரூ. 4,638 எனும் அளவில் முதல் மூன்றிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஃபிட்ச் எனும் தரச்சான்று நிறுவனம், அரசு தற்போது ஒதுக்கியுள்ள ரூ. 48,000 கோடி என்பது வங்கிகளுக்கு போதுமானது அல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும், அரசு தற்போது அறிவித்துள்ள ரூ. 48 ஆயிரம் கோடி எனும் மூலதன மதிப்பானது வங்கிகளுக்கு ஒரு ஆறுதலைத் தருமே தவிர, நிரந்தரமான நிதி தேவைகளைப் பூர்த்தி செய்யாது என்று ஃபிட்ச் நிறுவனம் கூறியுள்ளது. ஏறக்குறைய ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பிலான மூலதனம் வங்கிகளுக்குத் தேவையென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நிதி நெருக்கடி, வாராக்கடன் உள்ளிட்ட பல பிரச்சினைகளும் இருப்பதால், வங்கிகள் எந்தத் தடங்கலும் இல்லாமல் அவற்றின் அடிப்படை நிதித் தேவைகளை எல்லாம் பூர்த்திசெய்துகொள்ள இந்தத் தொகை தேவையென ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.