Skip to main content

கூர்மையான நிலவின் பள்ளத்தாக்கு புகைப்படம்- 'வாவ்' சொல்ல வைக்கும் சந்திரயான் - 3

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

 First country to touch the South Pole; Chandrayaan-3 sent the valleys of the moon

 

இந்தியா சார்பில் சந்திரயான் - 3 என்ற விண்கலத் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து புவியின் சுற்று வட்டப்பாதையில் பலகட்ட உயரம் உயர்த்தும் நடவடிக்கையும், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் உயரம் குறைக்கும் நடவடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டு நிலவின் அருகில் சென்றுள்ளது சந்திரயான் - 3.

 

தற்போது 153×163 கி.மீட்டராக நிலவின் சுற்று வட்டப்பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து லேண்டர் நாளை பிரிக்கப்பட இருக்கிறது. அதே சமயம் வரும் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 3 திட்டமிட்டபடி இறக்கப்பட்டால், உலகிலேயே நிலவை தென் துருவத்தில் ஆராய வாய்ப்பு பெற்ற நாடாக இந்தியா இருக்கும். இந்நிலையில் ஏற்கனவே சந்திரயான் - 3 விண்வெளியிலிருந்து நிலவின் புகைப்படம், பூமியின் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து அனுப்பிய நிலையில், தற்போது நிலவின் பள்ளத்தாக்குகளை கூர்மையாக படம் எடுத்து சந்திரயான் - 3 அனுப்பியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி லேண்டர் கேமராவில் எடுக்கப்பட்ட நிலவில் உள்ள பள்ளத்தாக்குகள் தெளிவாக தெரியும் அந்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டு 'வாவ்' சொல்ல வைத்துள்ளது இஸ்ரோ.

 

 

சார்ந்த செய்திகள்