Skip to main content

மத்தியப் பிரதேசம் குவாலியரில் ரயில் பெட்டியில் தீ விபத்து!!

Published on 21/05/2018 | Edited on 21/05/2018

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து டெல்லிவரை செல்லக்கூடிய ஆந்திர விரைவு ரயிலின் குளிர்சாதன வசதி கொண்ட இருபெட்டிகள் மத்தியப் பிரதேசம் குவாலியர் என்னும் இடத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்தது.

 

fire

 

இன்று காலை 6.25 மணிக்கு டெல்லியிலிருந்து ஆந்திர புறப்பட்ட ஆந்திர விரைவு ரயில் இன்று நண்பகல் மத்திய பிரதேசம் குவாலியரில் பிர்லா நகர் என்னும் இடத்தில் வந்துகொண்டிருந்தபோது ரயிலின் குளிர்சாதன வசதிகொண்ட இரு பெட்டிகள் திடீரென தீப்பிடித்தது. 

 

இதன்காரணமாக உடனே ரயில் நிறுத்தப்பட்டு மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து எரிந்த தீ அருகிலுள்ள பெட்டிகளுக்கும் பரவ ஆரம்பித்தது. இந்த ரயில் தீப்பிடிப்பு சம்பவம் பற்றி அறிந்த குவாலியர் பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்து தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முயன்று வருகின்றனர்.  

 

fire

 

தீவிபத்து பற்றி அறிந்தவுடன் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் உடனே வெளியேற்றப்பட்டதால் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் இல்லாமல் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்; கேபிள் ஆபரேட்டருக்கு போலீஸ் வலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
The old woman who was alone at home was brutalized; Police net for cable operator

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை துண்டால் நெரித்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் கேபிள் ஆபரேட்டரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கௌரவ பள்ளம் பூங்கா அருகே வசித்து வருபவர் மூதாட்டி லட்சுமி. இவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கேபிள் டிவி ஆபரேட்டர் கோவிந்த் நல்ல முறையில் பழகி வந்துள்ளார். வீட்டில் மூதாட்டி லட்சுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த கோவிந்த் அடிக்கடி வீட்டுக்கு வந்து உதவிகளை செய்வது போல் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென வீட்டுக்கு வந்த கேபிள் ஆபரேட்டர் கோவிந்த், சோபாவில் மூதாட்டி அமர்ந்திருந்தபோது பின்புறமாகச் சென்று கையில் இருந்த துண்டால் கழுத்தை நெருக்கியுள்ளார். மூதாட்டி கத்திக் கூச்சலிட முயன்றும் விடாமல் நெருக்கமாகக் கழுத்தை நெருக்கியுள்ளார். இதில் மூதாட்டி மயக்கம் அடைந்தார். ஆனால் மூதாட்டி இறந்து விட்டதாக நினைத்த கோவிந்த், அவரிடம் இருந்த பத்து சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

மயக்கம் தெளிந்த மூதாட்டி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கேபிள் ஆபரேட்டர் மூதாட்டியின் கழுத்தை நெரிக்கும் அந்த பரபரப்பு காட்சிகள் இடம் பெற்ற நிலையில், அதை ஆதாரமாக வைத்து கேபிள் ஆபரேட்டர் கோவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.