ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் ஃபாரூக் அப்துல்லா. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான இவர், ஜம்மு காஷ்மீரின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 83 வயதான ஃபாரூக் அப்துல்லா, கடந்த மாத தொடக்கத்தில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
இந்தநிலையில், அவருக்கு கடந்த 30ஆம் தேதி கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து ஃபாரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக்கொண்டனர். இந்நிலையில், ஃபாரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது மகனும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, "மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர்கள் தந்தையை இன்னும் சிறப்பாக கவனிப்பதற்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என கூறியுள்ளார்.