மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளை மாபெரும் ட்ராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் போராடவில்லை என்றும், விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்குவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "சில விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடுவதைப் பார்த்தபோது, அவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் கூட, நாங்கள் இதற்கு கண்டிப்பாகப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணவேண்டும் என நினைத்தோம். இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் என நாங்கள் இன்னும் நம்புகிறோம்" எனக் கூறியுள்ளார். மேலும் விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.