மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று, வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணியை நடத்திய விவசாயிகள், கடந்த 6 ஆம் தேதி நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், விவசாயிகள் நாளை ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதுகுறித்து கிசான் அந்தோலன் கமிட்டி, பிப்ரவரி 18 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு தழுவிய 'ரெயில் ரோகோ' (ரயில் மறியல்) போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துவோம். பயணிகளுக்கு சிரமத்தைத் தவிர்க்க நாங்கள் தின்பண்டங்களை வழங்குவோம்" எனத் தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், அவற்றின் பாதையும் மாற்றப்பட்டுள்ளது.