ஃபேஸ்புக், கூகுளில் பதஞ்சலி பொருட்களுக்கு விளம்பரம்: ராம்தேவ் புதிய திட்டம்!
தனது பதஞ்சலி நிறுவனத்தை முகநூல், கூகுள் பக்கங்களில் விளம்பரப்படுத்த பாபா ராம்தேவ் முயற்சிகளை எடுத்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதஞ்சலி நிறுவனம் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது. பத்திரிகை இதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பதஞ்சலி விளம்பரங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையில் விளம்பரங்களைக் கையாண்டு, கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கு இந்த முயற்சியை பதஞ்சலி மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே, முகநூல் மற்றும் யூ-ட்யூப் சேனல்களில் பதஞ்சலி நிறுவனத்திற்கான விளம்பரங்கள் வந்தன. இதனால், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது.
இதன் மூலம் தென்மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்றவற்றில் பதஞ்சலி பொருட்களைப் பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்களில் வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது; ‘சுதேசி’ பொருட்களையே உபயோகிக்க வேண்டும் என பிரச்சாரங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இதே பிரச்சாரங்களைச் செய்ய பாபா ராம்தேவ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ச.ப.மதிவாணன்