Published on 18/06/2019 | Edited on 18/06/2019
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி, தேர்தலின் போது விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என தெரிவித்தார். இந்நிலையில் தற்போது ஐரோப்பிய யூனியன் இதுகுறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
உலக வர்த்தக அமைப்பான டபள்யூ.டி.ஓ (WTO) கூட்டத்தில், மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும் என ஐரோப்பிய யூனியன் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் சார்பாக, "மோடி விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக சுமார் 25 டிரில்லியன் ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார், மேலும் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என கூறியுள்ளார். இதேவியெல்லாம் அவர் எப்படி செய்வார்? இது குறித்து விளக்குங்கள்" என கேட்கப்பட்டுள்ளது.