Skip to main content

ஆங்கிலம் படிக்க திணறிய ஆங்கில ஆசிரியர்... உ.பி-யில் அதிர்ச்சி!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019


உத்தரப் பிரதேசத்தின் உன்னாவோவை அடுத்த சிக்கந்தர்பூர் சரௌசி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியிக்கு மாவட்ட நீதிபதி திடீர் சோதனைக்கு சென்றுள்ளார். அப்பள்ளிக்கு சென்ற மாவட்ட நீதிபதி தேவேந்திரகுமார் பாண்டா என்பவர், அந்த பள்ளியில் இருந்த ஆங்கில ஆசிரியரை அழைத்து, ஆங்கில புத்தகத்தை எடுத்து கொடுத்துள்ளார். அந்த ஆசிரியர் யோசிக்க, அவரிடம், அந்த புத்தகத்தில் இருந்த சில ஆங்கில வரிகளை சுட்டிக் காட்டி, அதை வாசிக்கச் சொல்கிறார்.

 


ஆனால் ஆசிரியரோ, அந்த ஆங்கில வரிகளை வாசிக்கத் திணறுகிறார். அதன் பின், அதில் கூறியவற்றை விளக்க முற்படுகிறார். ஆனால், இதற்கு கோபப்பட்ட அதிகாரி,  " நான் உங்களை மொழிபெயர்த்துச் சொல்லச் சொல்லவில்லை. இதில் இருப்பதை அப்படியே படியுங்கள்" என்று காட்டமாகக் கேட்கிறார். அதற்கு அந்த ஆங்கில ஆசிரியர் திணற, மற்ற அதிகாரிகளைப் பார்த்து, ஒரு ஆசிரியரான இவர்,  இந்த புத்தகத்தில் இருக்கும் சில வரிகளை வாசிக்கவே திணறுகிறார். ஆகையால் இவரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்