இஸ்லாம் சமூகத்தில் மூன்றுமுறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் விவாகரத்து முறை தண்டனைக்குரிய குற்றம் என நாடாளுமன்ற மக்களவையில் பாஜக அரசு மசோதா நிறைவேற்றியது.
அதனை தொடர்ந்து மாநிலங்களவையில் அம்மசோதா நிறைவேற்றப்படாமல், நிலுவையில் உள்ளது. இரு அவைகளிலும் நிறைவேறினால் மட்டுமே மசோதா சட்டவடிவம் பெறும் என்பதால் இன்னும் இந்த மசோதா சட்ட வடிவம் பெறாமல் உள்ள நிலையில் தற்போது அதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் அதற்கென அவசர சட்டம் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இப்படி அவரசர சட்டம் இயற்றுவது இது 3-வது முறையாகும்.
கடந்த 19-ந் தேதி, இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து நேற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.