ஒரிசா மாவட்டத்தில் யானையின் அட்டகாசத்துக்கு பயந்து 300 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட சமபவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள தானாகாதி, சகிந்தா வனப்பகுதிகளில் இருந்து மலைமான் என்கிற யானை ஒன்று அடிக்கடி வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி உணவு பொருட்களை சாப்பிட்டுவிட்டு அதன் பிறகு காட்டிற்கு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அருகில் இருந்த கிராமத்திற்கு வந்த அந்த யானையை மக்கள் கூட்டமாக சேர்ந்து விரட்டியுள்ளார்கள். ஆனால் தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டு இருந்த அந்த யானை நேற்று இரண்டு முதியவர்களை மிதித்து கொன்றது. இதனால் அதிர்ச்சி அடந்த பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். காட்டு யானை அந்த பகுதியிலேயே தொடர்ந்து சுற்றி வருவதால் அப்பகுதியில் உள்ள 300 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் காட்டு யானையை படிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.