Skip to main content

இனி சபரிமலைக்கு எலக்ட்ரிக் பஸ்ஸில் செல்லலாம்!!!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
ksrtc


தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் மின்சார பஸ் சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் சேவையை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன் தொடங்கி வைத்தார். இந்த மின்சார பஸ்ஸின் விலை ரூ. 2 கோடி. 33 இருக்கைகள் கொண்டது. இது அதிகபட்சமாக 120கிமீ வேகம் வரை செல்லக்கூடியது. ஒரு கிமீ செல்ல 0.8 யூனிட் மின்சாரமே பயன்படுகிறது. இந்த மின்சார பஸ் ஒரு முறை சார்ஜ் செய்தால் 250கிமீ வரை ஓடும். இந்த பஸ்ஸை முழுவதுமாக சார்ஜ் செய்ய 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
 

மேலும், இந்த மின்சார பஸ்ஸின் சோதனை ஓட்டம் கர்நாடகாவிலும், ஆந்திர பிரதேசிலும்தான் முதன் முதலாக இயக்கப்பட்டது. ஆனால், கேரளாவில்தான் முதன் முறையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஸ் சுற்றுசூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் முதன் முதலில் இந்த சேவை ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள குலு-மணாலி பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் நிலக்கல் முதல் சபரிமலை வரை இந்த சேவை செயல்பட உள்ளது. 
 

சார்ந்த செய்திகள்