Skip to main content

சட்டசபை தேர்தல் - நாகலாந்து, மேகாலயாவில் இன்று வாக்குப்பதிவு துவக்கம்

Published on 27/02/2018 | Edited on 27/02/2018
assembly polls


மேகாலயா மற்றும் நாகலாந்து சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் இன்று 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 32 பெண்கள் உட்பட மொத்தம் 369 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேகாலயாவை பொறுத்தவரை தற்போது இங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. முதல்-மந்திரியாக முகுல் சங்மா பதவி வ்கித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பேரணியாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

இதேபோல், நாகலாந்து மாநிலத்தில் உள்ள 59 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 13-வது சட்டசபையை அமைக்க நாகலாந்து மக்கள் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, லோக் ஜனசக்தி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தீவிரமாக களமிறங்கி உள்ளன.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், இரு மாநிலங்களிலும் காலையில் தொடங்கி மாலை வரை வாக்குப்பதிவு நடைபெறும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

இரு மாநிலங்களிலும் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும் என என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

வெளியான கருத்துக் கணிப்பு; ஆட்சியைப் பறிகொடுக்கும் பாஜக!

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

pre exit poll result in karnataka assembly election

 

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே மாதத்துடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் தேதி நேற்று (29.03.2023) காலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப். 13 ஆம் தேதி தொடங்கி ஏப். 20 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு மீதான பரிசீலனை ஏப். 21 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஏப். 24 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மே. 10 ஆம் தேதி வாக்குப் பதிவும், மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில் தனியார் கருத்துக் கணிப்பு நிறுவனமான ஏபிபி - சிவோட்டர்ஸ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது 115 முதல் 127 இடங்கள் வரையிலும், பாஜக 68 முதல் 80 இடங்கள் வரையிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 23 முதல் 30 தொகுதிகள் வரை பெறும் என்று தெரிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பானது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

குஜராத், இமாச்சல் தேர்தல் முன்னணி நிலவரம்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

 Gujarat, Himachal polls lead situation

 

குஜராத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்குப்பதிவானது துவங்கியுள்ளது. அதேபோல் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் துவங்கியுள்ளது.

 

குஜராத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 64.33 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையானது துவங்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நடைபெறும் நிலையில், குஜராத்தில் குறைந்தபட்சம் 92 இடங்களில் வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். அதேபோல் இமாச்சல் சட்டசபை தேர்தலில் 68 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. குறைந்தது 35 இடங்களைப் பெறும் கட்சி இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும்.

 

இந்த இரண்டு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 135 தொகுதிகளிலும், காங்கிரஸ் 41 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 1 தொகுதியிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோல் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 30 இடங்களிலும், காங்கிரஸ் 29 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.