ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஒரு புறம் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பென மும்முரமாக செயல்பட்டுவருகின்றன. மறுபுறம் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தி அதன் கடமைகளை
இந்நிலையில் தெலங்கானாவில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சில வாக்காளர்களின் பெயர்கள் ஆப்பிள், இட்லி, பாகுபலி, என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற வித்தியாசமான பெயர்களில் மொத்தம் 37 வாக்காளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை தேர்தல் ஆணையம் உடனடியாக நீக்கியும் இருக்கிறது.
இதுகுறித்து தெலங்கானா தலைமைத் தேர்தல் அதிகாரி ரஜத் குமார் கூறும்போது, ''ஊழியர்களின் கவனக்குறைவு மற்றும் எழுத்துப் பிழை காரணமாக இந்தத் தவறு நடந்திருக்கலாம். தவறு கண்டறிந்ததும் உடனடியாக 18 பேரின் பெயர்களை நீக்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.