Published on 09/08/2022 | Edited on 09/08/2022
சிவசேனா கட்சியின் தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மகாராஷ்டிரா அமைச்சரவையில் விரிவாக்கம் நடைபெற இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் புதிதாக 18 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பாஜக மற்றும் சிவசேனாவை (ஏக்நாத் சார்பு) சேர்ந்த தலா 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் பகத்சிங் கோஷாரி.