Skip to main content

சர்ச்சையில் கமல்நாத்... நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்...

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

ec sends notice to kamalnath

 

மத்தியப்பிரதேச மாநிலத்தில், பாஜகவைச் சேர்ந்த பெண் அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் 'தப்ரா' தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அதே தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இமார்டி தேவியை பாலியல் ரீதியாகத் தரக்குறைவாகப் பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ராகுல் காந்தி, "கமல்நாத் எனது கட்சியைச் சேர்ந்தவர், ஆனால் தனிப்பட்ட முறையில், அவர் பேசியது எனக்குப் பிடிக்கவில்லை" எனத் தெரிவித்தார். ஆனால், கமல்நாத் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் 48 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் கமல்நாத்துக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்