Skip to main content

இளைஞர்களை ஏமாற்றி 5000 கோடி ரூபாய் மோசடி... பிரபல தொழிலதிபர் அதிரடி கைது...

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

இந்தியா முழுவதும் 17 லட்சம் பேருக்கு மேற்பட்டோரிடம் சுமார் 5,000 கோடி ரூபாய் மோசடி செய்த eBiz.com நிறுவனர் மற்றும் அவரது மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ebiz founder arrested

 

 

கடந்த 2001ம் ஆண்டு இளைஞர்களை மையமாகக் கொண்டு டெல்லியில் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். MLM வகை தொழில்முறையை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனத்தில் முதலில் 16,821 ரூபாயை செலுத்த வேண்டும். பின்னர், அவர்கள் சேர்த்துவிடும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 4% கமிஷன் கொடுக்கப்பட்டுவந்தது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கிலான இளைஞர்கள் இணைந்தனர்.

குறிப்பாக கல்லூரி மாணவர்கள், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் இதில் ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்தனர். இந்நிலையில், இந்நிறுவனம் மோசடி செய்துள்ளதாக சைபராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விசாரணையை ஆரம்பித்த போலீசார் இந்த மோசடி குறித்து கண்டறிந்து, இந்த நிறுவனத்தின் நிறுவனரான பவன் மல்ஹான் மற்றும் அவரது மகன் ஹித்திக் மல்ஹான் ஆகியோரை கைது செய்ததுடன், நிறுவனத்தின் டெல்லி தலைமையகத்துக்கு சீல் வைத்தனர். மேலும் அவரது வங்கிக்கணக்கில் உள்ள 398 கோடி ரூபாயையும் முடக்கினர்.

டெல்லி ஐஐடியில் கணிதம் மற்றும் இயற்பியலில் பிஎச்டி முடித்துள்ள பவன் மல்ஹான் கனடாவைச் சேர்ந்த Skybiz என்ற நிறுவனத்தில் சேர்ந்து  பணியாற்றினார். பின்னர் இந்தியா வந்த அவர், இளைஞர்களை குறிவைத்து eBiz.com என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கினார்.

MLM முறைக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பினால்  இந்நிறுவனத்தின் கிளைகளை ஹைதராபாத், சென்னை, பெங்களூரு மற்றும் உத்தர பிரதேசம், மஹாராஸ்டிரா, கோவா, ஜம்மு&காஷ்மீர் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தினார். தற்போது தந்தை, மகன் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ள இந்த செய்தி, இந்நிறுவனத்தை நம்பி பணம் செலுத்தியவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்