வறுமை காரணமாக பிச்சை எடுத்தால் தவறில்லை! - மத்திய அரசு கருத்து
வறுமை காரணமாக ஒருவர் பிச்சை எடுப்பது குற்றமாகாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிச்சை எடுப்பதை நாட்டிலிருந்து முழுமையாக தடைவிதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு மத்திய அரசு அளித்திருந்த பதில் மனுவில், வறுமை காரணமாக ஒருவர் பிச்சை எடுத்தால் அது குற்றமாகாது. ஆனால், ஒருவரை பிச்சையெடுக்க நிர்பந்திப்பது குற்றச்செயலாகும் மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், விருப்பத்தோடு பிச்சை எடுப்பவர்கள் யாரையாவது காட்ட முடியுமா? மத்திய அரசின் இந்த நிலைப்பாடு வேதனையளிக்கிறது எனக்கூறினர். மேலும், வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.