மக்களவை தேர்தல் முடிந்து பாஜக பதவியேற்றபின் முதல் கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். இரண்டாம் நாளான இன்று தமிழகத்தை சேர்ந்த எம்.பி க்கள் பதவியேற்றுள்ளார்.
இதில் நேற்று பதவியேற்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு விருப்பமான பிராந்திய மொழிகளையே பிரமாணம் மேற்கொண்டனர். அந்த வகையில் இன்று தமிழக எம்.பி க்கள் தமிழ் மொழியில் பதவியேற்றனர். அப்போது அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பதவியேற்பின் இறுதியில் தங்களது கொள்கைகளையே, அல்லது வேறு சில பிடித்த விஷயங்களையோ கூறி உரையே முடித்தனர். அப்போது தமிழக எம்.பி க்கள் பலர் "வாழ்க தமிழ்" என்ற முழக்கத்தோடு தங்கள் உரையை முடித்தனர்.
அப்போது ஒவ்வொரு முறையும் தமிழக எம்.பி க்கள் "வாழ்க தமிழ்" என முழக்கமிட்ட போது, மக்களவையில் இருந்து வேறு சில மாநில உறுப்பினர்கள் "பாரத் மாதா கீ ஜெய்" என முழக்கமிட்டனர். இதுபோல பல முறை "வாழ்க தமிழ்" முழக்கத்திற்கு எதிர் முழக்கமாக "பாரத் மாதா கீ ஜெய்" கூறப்பட்டதால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் தொடர்ந்து வந்த தமிழக எம்.பி க்கள் பெரும்பாலானோர் வாழ்க தமிழ் என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்த நிலையில், சிறிது நேரத்தில் எதிர்தரப்பினர் "பாரத் மாதா கீ ஜெய்" என்ற முழக்கமிடுவதை நிறுத்தினர். இதனால் மக்களவையில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.