உத்திரபிரசேதம் மாநிலம் விநோதங்களுக்கு எப்போதும் பெயர் போனது. அந்த மாநில அரசு மனிதர்களை விட மாடுகள், குரங்குகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்தும். மேலும், மாடுகளுக்கு என்றே தனி ஆம்புலன்ஸ் வாகனத்தை வைத்துள்ளது. சில வாரங்களுக்கு மின்பு கூட மாடுகளை குளிரில் இருந்து காப்பாற்ற அவைகளுக்கு ஜெர்கின் வாங்க பல கோடிகளை மாநில அரசு ஒதுக்கியது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் 10 மாடுகளுக்கு போர்வை வாங்கி கொடுத்தால் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்படும் என்று குவாலியர் மாவட்ட ஆட்சியர் அனுராக் சௌத்ரி அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏற்கனவே மர கன்றுகளை நட்டு அதனுடன் செல்பி எடுத்து வந்தால் லைசென்ஸ் தருவதாக சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாடுகளை குளிர் இருந்து காப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.