Skip to main content

தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார் எடியூரப்பா- சிவக்குமார் வருத்தம்...

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
 

dk shivakumar

 

இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் கால தாமதம் செய்ததால், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த் நீதிபதி, சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியுள்ளது. 
 

இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு தன்னுடைய பலத்தை காட்ட இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக கூறி இருந்தது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வதற்காக  எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி என்று பல எம்.எல்.ஏ க்கள் வருகை தந்துள்ளனர். அதிருப்தியில் இருக்கும் காங். எம்.எல்.ஏ க்கள் இன்று நடைபெறும் நம்பிக்கை தீர்மானத்தில் கலந்துக்கொள்ளவில்லை. 
 

தற்போது சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது அமைச்சர் டி.கே. சிவக்குமார் எடியூரப்பாவை பார்த்து, “ ஒரு முன்னாள் முதல்வராகவும், எதிர்கட்சியின் தலைவராகவும் இருந்துகொண்டு இவர் தேசத்தையும், நீதிமன்றத்தையும் தவறாக பாதைக்கு அழைத்து செல்கிறார்” என்று கூறினார். 


 

சார்ந்த செய்திகள்