ஆந்திரா மாநிலம் கடப்பா அருகேயுள்ள ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் இன்று மதியம் வனத்துறையால் மீட்கப்பட்டன.
அவர்கள் யார் ?, செம்மரம் வெட்ட வந்தவர்களா? கொலை செய்யப்பட்டார்களா? என ஆந்திரா போலீசார் விசாரணை நடத்தப்பட்டன.
இந்நிலையில், சேலம் மாவட்டம் கருமந்துறை அருகிலுள்ள கிளாக் காடு பகுதியை சேர்ந்த இராஜப்பன், அடியனூரைச் சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் முருகேசன், விழுப்புரம் மாவட்டம் பெரியகல்ராயன் மலையில் உள்ள அவரை கிராமத்தைச் சேர்ந்த கருப்பனன் என்ற மூவர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அருகில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் குட்டையில் மூழ்கி உயிரிழந்திருப்பது காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு செம்மரம் வெட்டியதாக 12 தமிழர்களை கைது செய்தது ஆந்திரா போலிஸ். அப்போது 4 பேர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தேடப்படுகிறார்கள் என அறிவித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.