Skip to main content

இரவு நேர ஊரடங்கு அமல்..திரையரங்குகள் , உடற்பயிற்சி நிலையங்களை மூட உத்தரவு - கரோனாவை கட்டுப்படுத்த டெல்லி அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

delhi

 

டெல்லியில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மேலும் டெல்லியில் இதுவரை 165 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

அதன்படி, டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மெட்ரோ சேவை 50 சதவீத பயணிகளுடனும், உணவகங்கள் மற்றும் பார்கள் 50 சதவீத வடிக்கையாளர்களுடனும் இயங்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

திரையரங்குகள், ஸ்பாக்கள், உடற்பயிற்சி நிலையங்கள், மல்டிபிளக்ஸ்கள், விருந்து அரங்குகள், ஆடிட்டோரியங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் ஆகியவற்றை உடனடியாக மூடவும் டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்