மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு மின் விநியோக நிறுவனங்கள் வைத்துள்ள 1,13,000 கோடி ரூபாய் கடன் இன்னும் நான்கு ஆண்டுகளில் முழுவதும் திருப்பித் தரப்படும் என மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மின் துறையில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பேட்டியளித்தார். அதில், மின் விநியோக நிறுவனங்கள் தமது மின் நுகர்வுக்கான தொகைகளைப் பாக்கி வைக்காத வகையில் உடனுக்குடன் செலுத்தும் வகையில் புதிய நடைமுறைக் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் முதல் படியாக, மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மின் விநியோக நிறுவனங்கள் வைத்துள்ள 1,13,000 கோடி ரூபாய் கடன் மாத தவணையாகப் பிரித்து செலுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குள்ளாக முழுவதுமாகத் திருப்பி தரப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மின்துறை சீர்திருத்த நடவடிக்கைளில் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.