இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. மூன்றாம் அலை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று பல்வேறு நிபுணர்களும் கூறி வரும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக 40 ஆயிரம் என்ற அளவில் இருந்து வந்த சூழலில், இந்த எண்ணிக்கை சற்றே குறைந்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 30,941 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 350 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக நேற்று பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 36,275 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 3.28 கோடி கரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3.20 கோடி பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 3.70 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.