மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது, நாளை (24/05/2021) புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு 'யாஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த 'யாஸ்' புயலானது வரும் மே 26- ஆம் தேதி ஒடிஷா- மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'யாஸ்' புயலை எதிர்கொள்வது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பற்றியும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய அமைச்சகங்களின் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகளுடன காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநில அரசுகளின் உயரதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.
'யாஸ்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ரயில்களை ரத்துச் செய்தது இந்திய ரயில்வே. மேலும், ஒடிஷா மாநிலத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.